செப். 16க்கு பதில் 17ம் தேதி மீலாது நபி: தலைமை காஜி அறிவிப்பு

62பார்த்தது
செப். 16க்கு பதில் 17ம் தேதி மீலாது நபி: தலைமை காஜி அறிவிப்பு
மீலாது நபி செப். 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு செப். 16-ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மறுநாள் செப். 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘செப். 4-ம் தேதி புதன்கிழமை மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வெள்ளிக்கிழமை செப். 6-ம் தேதி முதல் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மீலாது நபி செப். 17-ம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி