மதம், மொழி பிரிவினை போக்குக்குமாணவர்கள் பலியாக கூடாது: ஆளுநர்

61பார்த்தது
மதம், மொழி பிரிவினை போக்குக்குமாணவர்கள் பலியாக கூடாது: ஆளுநர்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியுள்ளது என்றும், உலகளவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்றும் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பெருமிதத்துடன் கூறினார். மேலும், இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகி விடக்கூடாது என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி மற்றும் சென்னை அரும்பாக்கம் டி. ஜி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கம் மற்றும் விருது வழங்கும் விழா அக்கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியது, ஒட்டுமொத்த உலகை அழித்துவிடும் ஆற்றல் கொண்ட அணுகுண்டுகளை சில நாடுகள் வைத்துள்ளன. ஆனால், இந்தியா எப்போதும் அமைதியை விரும்பக்கூடிய நாடாகவே இருந்து வருகிறது. உலகில் ஒருபுறம் சில நாடுகளில் செல்வம், பொருளாதார வளமும் மிதமிஞ்சி காணப்படுகிறது. ஆனால், அதேநேரத்தில் சில நாடுகளில் பசியும், பட்டினியும் நிலவுகிறது.

இந்திய தேசத்தை சிலர் இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் துண்டாட நினைக்கிறார்கள். இத்தகைய பிரிவினை போக்குக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகி விடக்கூடாது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி