மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உதவி செய்து தரப்படும்: அமைச்சர்

71பார்த்தது
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு உதவி செய்து தரப்படும்: அமைச்சர்
முதல்வர் உத்தரவுப்படி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை BBTC தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்படுமென திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனவும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி