அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ். பி. வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும் என்று அதிமுக ஐ. டி. விங் விமர்சித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ். பி. வேலுமணிக்கும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது என்று அண்ணாமலை பேசியதற்கு பதிலடியாக இந்த விமர்சனம் சொல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஐ. டி. விங் தனது எக்ஸ் பக்கத்தில், அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ். பி. வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுக பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.