பிரசாத தரத்தை உறுதி செய்ய அதிகாரி தேவை: தமாகா வலியுறுத்தல்

68பார்த்தது
பிரசாத தரத்தை உறுதி செய்ய அதிகாரி தேவை: தமாகா வலியுறுத்தல்
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும் என்று தமாகா பொதுச் செயலாளர் எம். யுவராஜா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற கோயில்களில் தமிழக அரசு அந்தந்த கோயில்களுக்கென்றே ஒரு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை நியமித்து பிரசாதங்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை தமிழக இந்துசமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும்.

திருப்பதியில் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தைப் போல தமிழகத்திலும் நடைபெற்று விடக்கூடாது. இதனை தமிழக அரசின் அறநிலையத்துறை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கோயில்களின் புனிதத்தை காக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி