உதயநிதியின் கீழ் விளையாட்டுத்துறையும் வளர்ந்துள்ளது, அவரும் வளர்ந்துள்ளார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "விளையாட்டுத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி, துணை முதலமைச்சர் ஆனதில் விளையாட்டு வீரர்களான உங்கள் பங்கும் உண்டு. விளையாட்டுத்துறையை இந்தியாவே உற்று நோக்கும் துறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார். துறையும் வளர்ந்திருக்கு, துறையின் அமைச்சரும் வளர்ந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.