56 அடி ஆழத்தில் மெட்ரோ பணி தொடக்கம்

83பார்த்தது
56 அடி ஆழத்தில் மெட்ரோ பணி தொடக்கம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மிகவும் சவாலான சுரங்கப் பாதை பணியாக கருதப்படும், அடையாறு ஆற்றின் கீழே 56 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116. 1 கி. மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் (45. 4 கி. மீ. ) வரையிலான 3வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 19 உயர்மட்ட பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித் தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியிலிருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1. 226 கி. மீ. தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்த பிப். 16ம் தேதி தொடங்கியது. இதில், முதல் சுரங்கம் தோண்டும், திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பு நிலையத்தை சென்றடைய உள்ளன. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டிபிஎம் ) மூலமாக, இதுவரை 583 மீட்டர் சுரங்கப் பாதையும், 2வது இயந்திரம் மூலமாக, இதுவரை 250 மீட்டர் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் பல்வேறு கட்டமாக நகர்ந்து வரும் நிலையில், `காவிரி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றுப் படுகையை நேற்று முன்தினம் அடைந்தது. தொடர்ந்து, அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை பணியை தொடங்கியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி