சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை தொடரின்
இந்தியா-
ஆஸ்திரேலியா போட்டிகள் நடைபெற உள்ளதால் நள்ளிரவு 12 மணி வரை ரயில் சேவை இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
இந்தியா-
ஆஸ்திரேலியா அணிகள் மோதும்
கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள்,
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டியானது பரபரப்புக்கு பஞ்சமிருகாது என்பதால் ரசிகர்களின் தேவையை கருதி மெட்ரோ சேவை இன்று இரவு 12 மணி வரை இயங்கும் உலக கோப்பை காண டிக்கெட்டை காண்பித்து ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம் என பெற்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.