"பள்ளிகளை முறையாக நடத்த முடியாத அமைச்சர்" - எல்.முருகன் காட்டம்

55பார்த்தது
"பள்ளிகளை முறையாக நடத்த முடியாத அமைச்சர்" - எல்.முருகன் காட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் போலி திராவிட மாடல் திமுக அரசு. திமுக ஆட்சியில், தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் தரம் சரிந்துகொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளை முறையாக நடத்த முடியாத பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறுத்த வேண்டும்” என காட்டம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி