பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் சான்று விநியோகம்

55பார்த்தது
பிளஸ் 2 மறுகூட்டல் மதிப்பெண் சான்று விநியோகம்
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர் விடைத்தாள் நகல் கேட்டும், மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல்கள் கடந்த வாரம் விநியோகம் செய்யப்பட்டு, தற்போது மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் அல்லது மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றுகளையும் அல்லது மதிப்பெண் பட்டியல்களையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களை www. dge. tn. gov. in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி