கேரளா: பத்தனம்திட்டாவில் 18 வயது பட்டியலின மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த புதுமாப்பிள்ளை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு 13 வயது இருக்கும் போதிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 60 பேர் வரை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவையே இந்த சம்பவம் பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது.