நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வேண்டும்: மநீம கட்சி

54பார்த்தது
சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ. அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ. ஜி. மவுரியா, ஆர். தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கமல்ஹாசன் பேசும்போது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வெகு விரைவில் சில மாற்றங்களை கொண்டுவரவிருக்கிறேன். இதற்கான முன்னோட்டாம்தான் செயற்குழு கூட்டம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி