விமர்சனம் செய்யுங்கள்... ஆனால், மனதை நோகடிக்காதீர்கள்!: ரஜினி

78பார்த்தது
விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது. கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரை சமாளிப்பது கடினம். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்” என நடிகர் ரஜினி ஜாலியாக பேசினார்.

அமைச்சர் எ. வ. வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் அருமையான, பெயர், புகழ் பெற்று, அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என தெரிவித்தார்.

விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது. கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.

துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். பழைய ஸ்டூடண்ட் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரை சமாளிப்பது கடினம். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்” என நடிகர் ரஜினி ஜாலியாக பேசினார்.

தொடர்புடைய செய்தி