தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன் என்று அமெரிக்காவுக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நம்முடைய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகத்தை நோக்கி ஈர்க்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மாநகரங்களுக்கு நான் செல்கிறேன். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி திரும்பி வரும்போது அது குறித்து நிச்சயம் நான் தெரிவிப்பேன். அமெரிக்க வாழ் தமிழர்களை சந்திக்க இருக்கிறேன். உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் இந்த பயணம் வெற்றிகரமானதாக அமையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.