பெரம்பூர் - Perambur

பெரம்பூர்: மேம்பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

பெரம்பூர்: மேம்பாலங்களில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

தண்ணீர் வெளியேற்றப்பட்டதையடுத்து பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பிரதான சுரங்கப்பாதைகளை மூடி தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இரவில் மழை ஓரளவிற்கு குறைந்த காரணத்தால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மின் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் வியாசர்பாடி சுந்தரம் மேம்பாலம் பகுதியில் நேற்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து சீரானது. இதேபோன்று பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை முதல் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வியாசர்பாடி ஜீவா மேம்பாலத்தில் தண்ணீர் இன்னும் முழுமையாக வடியாத காரணத்தினால் அவ்வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. மேலும் அம்பேத்கர் கல்லூரி சாலை புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் இருப்பதால் ஜீவா வழியாக செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் சிக்காமலிருக்க வியாசர்பாடி ஜீவா மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


சென்னை
துணியே இல்லாமல் குளிப்பது சரியா? சாஸ்திரம் சொல்வதென்ன?
Oct 18, 2024, 11:10 IST/

துணியே இல்லாமல் குளிப்பது சரியா? சாஸ்திரம் சொல்வதென்ன?

Oct 18, 2024, 11:10 IST
நிர்வாணமாக குளிப்பது நிர்வாணமாக குளிப்பது ஒரு பாவம் என கூறப்படுகிறது. மேலும் இது வருண பகவானுக்கு சுத்தமாக பிரிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பாவத்தை செய்பவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும், குடும்பத்தில் புது பிரச்சனைகள் எல்லாம் வெடிக்கும். எப்போது குளித்தாலும் முழு ஆடைகளை அணிந்தே குளிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் உள்ளது. குறைந்தபட்சம் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டாவது குளிக்க வேண்டும். குளிக்கும் நீர் அதிக சூடாகவும் இருக்கக்கூடாது, அதிக குளிராகவும் இருக்க கூடாது.