தமிழக மீனவர் கொல்லப்பட்டால் அமைதிகாப்பது ஏன்?: சீமான் கேள்வி

65பார்த்தது
தமிழக மீனவர் கொல்லப்பட்டால் அமைதிகாப்பது ஏன்?: சீமான் கேள்வி
இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றால் கொதித்தெழுந்து கொலை வழக்குப் பதிந்து, போர் முழக்கமிட்டு ஐ. நா. மன்றம் வரை அபாய மணியடிக்கும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள், இதுவரை 800க்கும் மேற்பட்ட எம் தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட போதிலும் எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கடந்து செல்வது ஏன்?

தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால் தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? தமிழராய் பிறந்ததைத் தவிர எம் மீனவர் செய்த பிழை என்ன?

ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வேறெந்த மாநில மீனவரையும் சுட்டுக்கொல்லாதபோது, தமிழக மீனவரை மட்டும் இலங்கை கடற்படை சுட்டுக்கொல்லும் காரணம் இனவெறி அல்லாது வேறென்ன?

மீனவ மக்கள் வாழ்வுரிமை. தமிழர் எங்கள் பிறப்புரிமை. கச்சத்தீவை மீட்க வேண்டும், கடல்தாயின் பிள்ளையை காக்க வேண்டும். மீன்பிடித்தொழிலை உயர்த்த வேண்டும். மீனவர் கண்ணீரைத் துடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி