பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருளான தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் தயிரை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குளிர்ந்த உணவுப் பொருட்களை சூடான சாதத்துடன் கலக்கும்போது, அரிசியின் தன்மையை பாதிக்கும் என கூறப்படுகிறது.