முருக மாநாடு விவகாரம்.. அதிமுக நிலைப்பாடு என்ன? - அன்வர் ராஜா பதில்

36பார்த்தது
முருக மாநாடு விவகாரம்.. அதிமுக நிலைப்பாடு என்ன? - அன்வர் ராஜா பதில்
பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்திய விஷயத்தில் அதிமுக எதிர்வினையாற்றியது என அன்வர் ராஜா தெரிவித்தார். அதிமுக அமைப்புச்செயலாளர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. அண்ணா, பெரியாரை ஒருபோதும் நாங்கள் விட்டுத்தரமாட்டோம்" என தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் பங்கேற்று இருந்தனர். பின் இந்து முன்னணி அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி