விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. 8 பேர் காயம்

43பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வெறிநாய் கடித்து 3 குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சாலைகளிலும் நாய்கள் அதிகளவு சுற்றித்திரிவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி