2026ல் ஆட்சிக்கு வருவது என்பது பாஜகவின் நோக்கமல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், '2026 தேர்தலில் வெற்றிபெற்று என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக 40 - 50 இடங்களில் கூட வெற்றிபெறும். ஆனால், பாஜகவின் இலக்கு 2026 தேர்தல் கிடையாது, 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான்' எனக் கூறியுள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடும் எனத் தெரிகிறது.