காவலாளி அஜித்குமார் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை என்று நிகிதா கூறியுள்ளார். தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "அஜித்குமாரை தாக்கும்படி நான் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் எந்தவிதமான பண மோசடியும் செய்யவில்லை. கார் பார்க்கிங் செய்ய அவரிடம் சாவியை கொடுத்த போது நகைகள் காணாமல் போனது குறித்து கேட்டேன். அஜித் துன்புறுத்தப்பட்டு இறந்தது வருத்தம். அவரை கொல்ல நான் எந்த அழுத்தமும் தரவில்லை" என்றார்.