தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர், பள்ளிக்கு அரிவாளுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் விளையாட்டாக தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், மறுநாள் பள்ளிக்கு அரிவாளுடன் வந்துள்ளார். மேலும், தன்னை அடித்த மாணவரை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.