செயற்குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுத்த பாமக

135பார்த்தது
செயற்குழுவில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுத்த பாமக
ஜூலை 8 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். ராமதாஸ், அன்புமணி இருவருக்கும் மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், அன்புமணி நிர்வாக குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ஜி.கே.மணி நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பட்டியலை ராமதாஸ் விரைவில் வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி