திமுகவை சேர்ந்தவர்களை சிபிசிஐடி எவ்வாறு விசாரிக்கும்?: இபிஎஸ்

85பார்த்தது
சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது எங்களை வேண்டுமென்றே வெளியே அனுப்பி விட்டார்கள் எனவும், சட்டமன்றத்தில் தான் மக்களின் பிரச்னைகளை பேச முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் வைத்த கோரிக்கையை கேட்டு செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்காது. இந்த அரசுக்கு இதை பற்றி கவலை இல்லை. இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். காவல்துறை, வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதை எவ்வாறு சிபிசிஐடி விசாரிப்பார்கள்?

அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும், அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். 3ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்படும், வெற்றி கிடைக்கும். திமுகவின் பெரும் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தில் நாங்கள் கேட்கும் கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் முன்னர் பேரவைத் தலைவர் பதிலளிக்கிறார். சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி