விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிடும் குடிநீர் வாரியம்

60பார்த்தது
விதிகளை மீறி கழிவுநீரை திறந்துவிடும் குடிநீர் வாரியம்
சென்னையில் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் போன்ற நீர்வழித்தடங்களில் லாரிகள் மூலமாக விதிகளை மீறி கழிவுநீரை விடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்க நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சென்னை மாநகரப்பகுதி கழிவுநீர் மேலாண்மை விதிகள்-2022, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2022 ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.

இதன் கீழ் விதிகளை மீறும் லாரிகள் மீது அபராதம் விதிப்பது, பெர்மிட்டை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் எடுத்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய கழிவுநீர் கட்டமைப்பில் 4 ஆயிரத்து 659 கி. மீ. நீள கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலமாக 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அவ்வாறு நாளொன்றுக்கு 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளொன்றுக்கு 1, 054 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது லாரி குடிநீர், சொந்த ஆழ்துளை கிணறுகள், கேன் குடிநீர் போன்ற ஆதாரங்கள் மூலமும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி