ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ரவுடி திருவேங்கடத்தை போல, தனது கணவரையும் போலீசார் என்கவுண்ட்டர் செய்யக்கூடும் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நாகேந்திரனை எதன் அடிப்படையில் என்கவுண்ட்டர் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கும் தருவாயில் உள்ளதால் வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது என்றும், முக்கிய குற்றவாளிகள் யார் என்று விரைவில் தெரியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.