கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம்

59பார்த்தது
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 115. 58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் சிஎம்டிஏ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் 3. 93 ஏக்கர் பரப்பில் ரூ. 53. 50 கோடியில் ஒரு லட்சத்து 25, 402 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் உட்பட 3 தளங்களில் 188 கடைகளும், வாகனங்கள் நிறுத்துமிடமும், உணவு விடுதி, மீன்வள அமைப்புகளும் கட்டப்படவுள்ளன. இதற்காக கொளத்தூரில் சர்வதேச தரத்திலான வண்ண மீன்கள் வர்த்தக மையம்அமைக்க முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதேபோல், கொளத்தூர் ஏரிக்கரையில் ரூ. 6. 26 கோடியில் இயற்கை நடைபாதை, படகு சவாரி, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, செயற்கை நீர்வீழ்ச்சி, இசை பூங்கா, ஒளிரும் மீன் சிற்பங்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இந்த பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 115. 58 கோடியாகும். இதுதவிர, கொளத்தூர் நேர்மை நகரில் ரூ. 2. 50 கோடியில் கட்டப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம், ஜி. கே. எம் காலனி, ஜம்புலிங்கம் தெருவில் வட்டாட்சியர் அலுவலகம் என ரூ. 5. 22கோடியில் முடிவுற்ற பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி