மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களம்’ என அமெரிக்காவின் சிகாகோ கடற்கரையில் தான் சைக்கிள் ஓட்டிய வீடியோவைப் பகிந்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், அங்குள்ள சிகாகோ நகரில் மாலை வேளையில் கடற்கரையோரம் சைக்கிள் ஓட்டியபடி சென்ற காட்சிகளை தனது எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். முதல்வரின் அந்த சைக்கிள் பயண வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஈட்டன் (Eaton) நிறுவனத்தின் ஆராய்ச்சி & மேம்பாடு (R&D) மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். மேலும், இந்தியாவில் அஷ்யூரன்ட் நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னையில் அமையவுள்ளதையும் உறுதிசெய்தேன் என்று முதல்வர் அண்மையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.