வறுமையை ஒழிப்பதில் தமிழகத்துக்கு முதலிடம்: அரசு பெருமிதம்

82பார்த்தது
வறுமையை ஒழிப்பதில் தமிழகத்துக்கு முதலிடம்: அரசு பெருமிதம்
இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது.

மாதம் ரூ. 1, 000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1, 000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இதன்மூலம் இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழகம் தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது. அதாவது 11 இனங்களில் தமிழகம் நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், 2 இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி