மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்துபோன 2023ம் ஆண்டின் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது. தமிழ்நாட்டில், சென்னையிலும், அதனை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் மழையும் வெள்ளமும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை துன்ப இருளில் தள்ளிவிட்டன. இந்திய உபகண்டத்தில், ஒன்றிய
பாஜக அரசு இந்துத்துவா சக்திகளின் எடுபிடியாக ஆட்சி நடத்துகிறது. கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கின்ற அரசாக ஒன்றிய அரசு அமைய வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம், கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம், மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.