தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேளாண் துறை செயலர் அபூர்வா ஓய்வால் புதிய செயலராக வி.தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வரின் செயலராக உள்ள பிரதீப் யாதவ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். சமூக நலத்துறை செயலர் ஜெய முரளிதரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் பணியையும் செய்வார்.