தமிழக மீனவர்கள் பிரச்சினை: ஹெச். ராஜா திட்டவட்டம்

52பார்த்தது
தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறது என ஹெச். ராஜா கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 50 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீடு திட்டம் ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் வரை இன்சூரன்ஸ் கிடைக்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. ராமேசுவரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரை மட்டும், கிரிக்கெட் போட்டியில் இலங்கையை இந்தியா வென்ற காரணத்தால், இலங்கை கடற்படை கொலை செய்தது. மத்திய அரசு மீனவர் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாமும் இலங்கை மீனவர்களை கைது செய்தும் வருகிறோம் என அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி