சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்., 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்திய நிலையில், அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.