தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

65பார்த்தது
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 6, 7-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று முதல் அக். 9 தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, சேலம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், நீலகிரி, திருப்பூர், காரைகால், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானஅல்லது மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி