இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்க: விசிக

83பார்த்தது
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர்.

அவர்களில் மலைச்சாமி, மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மூவரையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடலில் குதித்த ராமச்சந்திரன் என்பவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர் மலைச்சாமி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி