ரயில் நிலையங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 9, 630 சிறார்கள் மீட்பு

75பார்த்தது
ரயில் நிலையங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 9, 630 சிறார்கள் மீட்பு
தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே வரை சுமார் 7 ஆண்டுகளில் 9, 630 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர். பி. எஃப்) மீட்டுள்ளனர்.

பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமையின் கொடுமை போன்ற காரணங்களால் சிறுவர், சிறுமியர் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி ரயில்கள் மூலமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது, அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர். பி. எஃப்) மீட்கின்றனர். பின்னர், இவர்கள் குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் நல குழு உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர், சிறுமியர்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்படுகின்றனர். அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே வரை 9, 630 சிறுவர், சிறுமியர்கள் மீட்டகப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி