பள்ளிக்கரணையில், தண்ணீர் ஏற்றிக் கொண்டு வந்த மினி டேங்கர் டிராக்டர், பாலாஜி நகர் செல்வதற்காக சாலையில் திரும்பும்போது, பாரம் தாங்காமல், மினி டேங்கர் கவிழ்ந்தது.இதனால், தாம்பரம் - வேளச்சேரி சாலை, பள்ளிக்கரணை பிரதான சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கிரேன் வாயிலாக டேங்கரை அப்புறப்படுத்தினர். இதனால், அச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.