சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல்: அரசாணை வெளியீடு

73பார்த்தது
சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு ஒப்புதல்: அரசாணை வெளியீடு
சிறுபுனல் மின் திட்ட கொள்கைக்கு தமிழக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தித்துறை செயலர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிரிக்கும் நோக்கில் தமிழக அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின் நிலைய திறன் கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்பாகவும், ஊரகப்பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த திட்டங்கள் பயன் தருகின்றன.

இந்த சிறுபுனல் மின் திட்டங்கள், குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எளிதான மற்றும் நிலையான எரிசக்தி வளமாகவும் இருக்கிறது. மேலும், இந்த சிறு புனல் திட்டங்களை மேம்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தேவைக்கும், அரசுக்கு விற்பனை செய்யவும், புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதல் தேவையை பூர்த்தி செய்யவும் உதவும் என தமிழ்நாடு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தனியார் அல்லது ஒரு நிறுவனம், தனியார் பலர் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகியோர் இந்த சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம். அல்லது சுய தேவைக்காகவும் அமைத்து, மின்சாரத்தை பரிமாறி கொள்ளலாம். இந்த கொள்கைப்படியான மின் திட்டங்களுக்கு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி