தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலைக்கல்லூரிகளில் 6, 699 கவுரவ விரிவுரையாளர்கள் பணி தொடர TN அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே, பணி நியமனம் செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ₹25, 000 வீதம் 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில், மார்ச் 2025 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிகிறது.