அண்ணாமலை தலைமையில் பாஜக தேர்தலில் வெற்றிபெறுவது சந்தேகம் என நடிகர் எஸ். வி. சேகர் தெரிவித்துள்ளார். அதிமுகவோடு கூட்டணியில் இருந்திருந்தால் பாஜகவின் வெற்றி ஓரளவு சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் தனியாக பாஜக 3% சதவீத வாக்குகளை மட்டுமே வைத்துள்ளது. அண்ணாமலை வேண்டுமானால் அதை 300% சதவீதம் என்று கூறலாம், ஆனால் உண்மை என்ன என்பது மே மாதம் தெரியவரும் எனக்கூறிய அவர், அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது என்றார்.