ஆவின் பாலகம்: ரூ. 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தல்

71பார்த்தது
ஆவின் பாலகம்: ரூ. 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தல்
சிறிய ஆவின் பாலகம் நடத்துவோரை மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து தினசரி சராசரியாக 35 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், ஐஸ்கிரீம் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஆவின் பாலங்கள் வாயிலாக மக்களிடம் சேர்க்கப்படுகிறது. ஆவின் பாலகம் நடத்துவோருக்கு குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து, விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். சரியாக விற்பனை செய்யாதவர்களின் பாலகத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் நடைபெறுகிறது.

சிறிய பாலகம் நடத்துவோர் மாதந்தோறும் சராசாரியாக மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறோம் என ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி