ஆவடி: ரயில் நிலையத்தில் பயணிகளை தாக்கிய இளைஞர்கள்
ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல பயணிகள் அரக்கோணம் மார்க்கமாக செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போழுது ரயில் போதையில் வந்த இளைஞர்கள் 4க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நடைமேடையில் இருந்த இரும்பு ராட்டை, பழுப்பை, டுப் லைட்டை உள்ளிட்டவற்றை பிடுங்கி நடைமேடையில் ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை பெரியவர்கள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரும்பு கம்பியால் முதியவரை தாக்கியதில் அவருக்கு தலை பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருப்பதையும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பயணிகளிடையே அச்சம் எழுந்துள்ளது. போதை இளைஞர்கள் பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.