மூன்றாம் பாலினத்தோருக்கான 'சிறகுகள்' என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. 5 சதவிகித குறைந்த வட்டியுடன் சுய தொழில் மற்றும் சிறு வணிகம் போன்ற தேவைகளுக்காக கடன் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பெறலாம். 36 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். மாநிலத்தின் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் இக்கடன் வழங்கப்படும். சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை கட்டாயமாகும்.