திருநெல்வேலி: சுத்தமல்லியில் இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்து கிருஷ்ணன் என்பவர் நேற்று (நவ., 25) மாலை 7 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 3 நபர்கள் அம்பாசமுத்திரம் பகுதியில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக கொலை செய்ததாக தங்கப்பாண்டியன், முருகன், சிவராமன் ஆகியோர் கைதாகினர். மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.