விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதியை அக்.1 முதல் அக்.6 வரை (அரசு ஏற்பாடுகள் தவிர) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ட்ரோன் மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.