உலக தரத்தில் மாறும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்

71பார்த்தது
உலக தரத்தில் மாறும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்
இன்று (ஜூன் 10) தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் உலகத்தரத்திற்கு மாறவுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏற்கனவே 636 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் மேலும் 255 கேமராக்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் திறனை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில் பிரஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி