சென்னையின் எப் சி அணியில் இணைந்த வெளிநாட்டு நட்சத்திர வீரர்

56பார்த்தது
சென்னையின் எப் சி அணியில் இணைந்த வெளிநாட்டு நட்சத்திர வீரர்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னையின் எப்.சி. அணிக்கு நைஜீரியாவை சேர்ந்த டேனியல் சிமா சுக்வு 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்கள வீரரான 32 வயதான டேனியல் சிமா 2024-25-ம் ஆண்டு சீசனுக்காக சென்னை அணியில் இணையும் 4-வது வீரர் ஆவார். முன்னதாக அவர் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்காக விளையாடி வந்தார். அவர் ஐ.எஸ்.எல். தொடரில் இதுவரை 60 ஆட்டங்களில் ஆடி 20 கோல் அடித்திருப்பதுடன், 4 கோல் அடிக்க உதவியும் புரிந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி