ஜம்மு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா

66பார்த்தது
ஜம்மு பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா
ஜம்முவில் உள்ள ரியாசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பாவின் TRF கூறியுள்ளது. சுமார் 12 பயங்கரவாதிகள் இரண்டு முதல் மூன்று குழுக்களாக பிரிந்து ரஜோரி-பூஞ்ச் ​​வனப்பகுதியில் ஊடுருவியுள்ளனர். வைஷ்ணோதேவி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் பலியாகினர். 3வது முறை பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி