“கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்” - சர்ச்சை ஆடியோ

67பார்த்தது
தமிழகத்தில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளரும், நெல்லை மாவட்ட இந்து முன்னனியின் முன்னாள் செயலாளருமான உடையார் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் என்பவருடன் செல்போனில் பேசிய உடையாரின் ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் கலவரம் செய்தால் நமக்கு ஓட்டு போடுவார்கள் எனவும் உட்கட்சி பூசல் இருந்ததன் காரணமாக தான் பாஜக தோல்வியடைந்தது” எனவும் பேசியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி