காசோலை மோசடி: ஹோட்டல் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை

64பார்த்தது
காசோலை மோசடி: ஹோட்டல் உரிமையாளருக்கு ஓராண்டு சிறை
திண்டுக்கல்: நத்தம் அருகே கோட்டையூர் - சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (34). இவர் கொட்டாம்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு கடனாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியிருந்தார். ஒரு வருடம் கழித்து கொடுத்த பணத்தை சரவணன் கேட்டுள்ளார். இதற்காக சுந்தரமூர்த்தி வங்கியின் காசோலையை கொடுத்துள்ளார். இந்த காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற முயன்ற போது சுந்தரமூர்த்தி கொடுத்த காசோலைக்கு அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இது குறித்து சரவணன் நத்தத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நீதிபதி உதயசூரியா முன்னிலையில் நேற்று (மே 17) விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளி சுந்தரமூர்த்திக்கு 1 வருட சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை செலுத்தவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி